சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்த விமல் வீரவன்ச
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa), சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இணைந்து சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
கல்வி அமைச்சுக்கு (Education Ministry) முன்பாக இன்று (12) காலை முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
புதிய கல்வி சீர்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரியும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
சத்தியாக்கிரகத்திற்கு அழைப்பு
இதேவேளை தங்கள் குழந்தைகளை நேசிக்கும் அனைத்து பெற்றோர்களும் இந்த தொடர்ச்சியான சத்தியாக்கிரகத்தில் எந்த பாகுபாடும் இன்றி இணைந்து கொள்ள முடியும் என விமல் வீரவன்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் திட்டமும் இந்த சீர்திருத்தங்களில் இணைக்கப்பட்டுள்ளமை மிகவும் தீவிரமான விடயம் எனவும் முழு நாடும் இதில் அவதானம் செலுத்தி குழந்தைகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |