வெளிநாட்டிலிருந்து வருகை தந்த கணவன்,மனைவி கட்டுநாயக்காவில் கைது
ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்த தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் இன்று (12.01.2025) அதிகாலையில் கைதுசெய்யப்பட்ட நிலையில், நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் திருமணமான 39 (கணவர்) மற்றும் 29 (மனைவி) மதிக்கத்தக்கவர்கள் என தெரியவந்துள்ளது.
ஆறு சூட்கேஸ்களில் கொண்டு வரப்பட்ட பொருள்
இருவரும் இன்று அதிகாலை 02.30 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் EY-394 விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

அவர்கள் 06 பொதிகளுடன் 100,000 வெளிநாட்டுத் தயாரிப்பு "பிளாட்டினம்" சிகரெட்டுகளையும் 500 அட்டைப் பெட்டி சிகரெட்டுகளையும்(பொதுவாக 10 பொட்டலங்கள்) எடுத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இருவரும் காவல்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், நாளை மறுதினம் (01/14) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |