மேர்வின் சில்வாவிற்கு மீண்டும் விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை (Mervyn Silva) மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேர்வின் சில்வா உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களை இன்று (24) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த மூவரையும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதி
கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, பெலவத்தை, பத்தரமுல்லை பகுதியில் வைத்து மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் மேர்வின் சில்வாவைத் தவிர, மேலும் இரண்டு பேர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட மேர்வின் சில்வா, அண்மையில் மஹர சிறையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
