முன்னாள் அமைச்சரின் மனைவி சிஐடியினரால் அதிரடி கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் துனேஷ் கன்கந்த (Dunesh Gankanda ) மனைவி குஷானி நாணயக்கார (Kushani Nanayakkara) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை கடந்த சனிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.
முன்னணி நிறுவனங்களான கிரீன் லங்கா டிராவல்ஸ், கிரீன் சீட் லங்கா மற்றும் கிரீன் சிறிலங்கா ஷிப்பிங் ஆகியவற்றின் இயக்குநரும் தொழிலதிபருமான குறித்த பெண் 700 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமான வரி ஏய்ப்பு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனடியாகக் கைது
இந்தநிலையில், அவரை உடனடியாகக் கைது செய்யுமாறு நீதவான், பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, சிரேஸ்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷானி அபேசேகர தலைமையிலான குழுவின் சிறப்பு நடவடிக்கையின் மூலம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து நீதிமன்றம் அவருக்கு பல முறை அறிவித்தல் வழங்கிய போதும் அவர் அதனை பொருட்படுத்தாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தொடர் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        