போர்க்குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட மகிந்த: கொந்தளித்த மொட்டு தரப்பு
நாட்டில் நிலவிய பிரிவினைவாதத்தை போதித்த குழுவினருடன் எழுத்தப்படாத இணக்கப்பாட்டிலேயே அரசாங்கம் இயங்குவதாக மொட்டு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ஜீவ எதிரிமான்ன (Sanjeeva Edirimanna) தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (12) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் ஜனாதிபதி மகிந்த கொழும்பு வீட்டை விட்டு வெளியேறியதை தமிழ் கார்டியன் வெளியிட்ட செய்தியில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் போர்க்குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவருமான என்று குறிப்பிட்டிருந்தது.
சிவில் யுத்தம்
இதில் என்ன தெரிவதென்றால், நாட்டின் உள்ளேயும் வெளியிலும் பிரிவினைவாதிகள் சிவில் போரை முடிவுக்கு கொண்டு வந்த தவரை குரோதத்துடனே நோக்குகின்றனர்.
இலங்கையில் பிரிவினைவாத யுத்தத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் தோட்டகடிக்கப்பட்டாலும் பிரிவினை வாதத்திற்கான அவர்களின் சிந்தனை இன்று தோற்கடிக்கப்படவில்லை.
இது இலங்கையில் நடைபெற்ற சிவில் யுத்தத்திற்கு மட்டும் பொருந்துவதில்லை.
வெளிநாடுகள்
உலகில் நடைபெற்ற பல பிரிவினைவாத பயங்கரவாத போர்களின் பின்னரான நிலைமையும் அவ்வாறே காணப்படுகிறது.
அதனால் தான் பல வெளிநாடுகள் எமது நாட்டின் அரசியலுக்கு பெரும் அழுத்தம் கொடுத்து வருகின்றது.
உதாரணமாக ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் எமக்கு எதிரான அறிக்கைகள் மற்றும் இலங்கை அரசியல் வாதிகள் சில நாடுகளுக்கு செல்கையில் தெரிவிக்கப்படும் எதிர்ப்புகள் மற்றும் யுத்தத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள், இராணுவ வீரர்களுக்கு விதிக்கப்படும் தடைகளையும் குறிப்பிடலாம்.
ஆனாலும் இந்த அரசாங்கம் பிரிவினைவாத சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றுவதாகவே தென்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
