முன்னாள் கடற்படைத் தளபதிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை மீளவும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நிஷாந்த உலுகேதென்ன (Nishantha Ulugetenne) இன்று (10) பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
கடற்படை புலனாய்வு பணிப்பாளராக சேவையாற்றிய காலத்தில், பொத்துஹெர பகுதியில் நடந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த விசாரணைக்கு அமைய நிஷாந்த உலுகேதென்ன ஜூலை 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர்
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சந்தேகநபரான நிஷாந்த உலுகேதென்ன கடற்படை புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டதுடன், கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாம் அவரது கண்காணிப்பில் செயற்பட்டுள்ளமை காவல்துறை விசாரணைகளில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
