யாழில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
யாழில் (Jaffna) மூன்று மோட்டார் சைக்கிள்களும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - மருதனார்மடம் காங்கேசன்துறை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வலது பக்கம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியை கடக்க முற்பட்ட வேளை பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அந்த துவிச்சக்கர வண்டி மீது மோதியுள்ளது.
பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து பக்கம் மாறி வலது பக்கம் சென்று எதிர்த்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளது.
விபத்தில் சிக்கியவர்கள்
இந்தநிலையில், விபத்தில் சிக்கியவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபத்து சம்பவம் குறித்தான விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
