துசித ஹல்லொலுவவிற்கு பிணை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா, துசித ஹல்லோலுவவை தலா 500,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
பயணத் தடை
அத்துடன் சந்தேக நபருக்கு பயணத் தடை விதித்த நீதவான், சந்தேக நபரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்.
அண்மையில் துசித ஹல்லொலுவவின் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி கொழும்பு குற்றவியல் பிரிவு நடத்திய சோதனையின் போது அவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
