முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் அதிரடியாக கைது
ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டதாக களுத்துறை பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பொலொஸ்சாகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தவறான நடத்தை காரணமாக பணிநீக்கம்
அவரின் தவறான நடத்தை புகார்கள் காரணமாக காவல்துறைசேவையில் இருந்து நீக்கப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் சிறிய பாரவூர்தியில் பயணிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் பி.ஆர். வீரசேன உள்ளிட்ட காவல்துறை குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
காற்சட்டை பொக்கெட்டில் மறைத்து
களுத்துறை அல்விஸ் வத்த பிரதேசத்தில் பாரவூர்தியை நிறுத்தி சோதனையிட்ட போது, சந்தேகநபர் தனது காற்சட்டை பொக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சுமார் 08 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஐம்பதாயிரம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.`
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |