முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் கைது
CID - Sri Lanka Police
Sri Lanka
Law and Order
By Shalini Balachandran
முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த ஜயகொடி (Priyantha Jayakody) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றக் கும்பல்
கெஹெல் பத்தர பத்மே என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பொய்யான முறைப்பாட்டை அளித்த சம்பவம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த ஜயகொடி உடல்நலக் குறைவு காரணமாக ராகம வைத்தியசாலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் காவலில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி