யாழ் கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை
யாழ் (Jaffna) வடமராட்சி - பருத்தித்துறை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் வலைகள் அழிக்கப்பட்டு வருவதாக கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக எல்லை தாண்டி இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவைமடி படகுகளின் மீன்பிடி அதிகரித்துள்ளது.
இதனால் நாளாந்தம் தமது வலைகள் அறுத்தழிக்கப்பட்டு வருவதாக கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெறுமதியான வலைகள்
இதனால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் இழுவைப்படகுகளால் அறுத்தழிக்கப்படுவதுடன் வலைகள் காணாமல் போவதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவும் இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவைப்படகுளின் எல்லை தாண்டிய மீன்பிடியால் பருத்தித்துறை பகுதி கடற்றொழிலாளர்களது வலைகள் அழிக்கப்பட்டுள்ளது.
[TU3TUOZ ]
கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்
அத்துடன் உள்ளூரில் சட்டவிரோத மீன்பிடியான சுருக்குவலைத் தொழில் நடவடிக்கையால் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகின்றது எனவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்த மீன்பிடி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலையும் தடுத்து நிறுத்த வேண்டும் என கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
