முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு மீண்டும் விளக்கமறியல்
புதிய இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர (Prasanna Ranaweera) மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் இன்று (08.09.2025) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீரவை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிமல் லான்சா அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நிமல் லான்சாவை தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
