கவலையில் கொழும்பு மேயர்! வெளியிடப்பட்ட அறிவிப்பு
கொழும்பு மநாகர சபை வரவு செலவு திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து, கொழும்பு மேயர் வ்ரே பல்தாசர், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சியை பரிசோதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று தோற்கடிக்கப்பட்டது.
மனசாட்சிக்கு எதிரான வாக்கு
அதன்போது, வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 60 வாக்குகளும், ஆதரவாக 57 வாக்குகளும் வழங்கப்பட்டு மூன்று வாக்குகளால் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கொழும்பு மேயர்,
“நீங்கள் கொழும்பு மாநகர சபை வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்கவில்லை, உங்கள் மனசாட்சிக்கு எதிராகச் செயல்பட்டு உங்களை நீங்களே தோற்கடித்துவிட்டீர்கள். உங்கள் மனசாட்சியை ஆராய்ந்து, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பாருங்கள்,” என்று அவர் மன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.