செம்மணி மனிதப் புதைகுழி வளாகத்தில் இன்றும் தொடரும் அகழ்வுப் பணிகள்
யாழ்பாணம் (Jaffna) செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் இன்றும் (26) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் ஏற்கனவே அகழப்பட்ட புதைகுழியை விஸ்தரிக்கும் பணிகளே இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்துப்பாத்தியில் உள்ள இரண்டு மனிதப் புதைகுழிகளிலிருந்து இதுவரை 150 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு, நீதிமன்ற கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
ஸ்கான் பரிசோதனை
இந்த நிலையில் சித்துப்பாத்தி புதைகுழி வளாகத்தில் ஸ்கான் பரிசோதனையினூடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் அகழ்வுகளை மேற்கொள்வதற்கான பாதீடு தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதீடு தயாரித்து, அதற்கான அனுமதி கிடைத்ததன் பின்னரே புதிய இடங்களில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க முடியும் என, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் மூன்றாவது பகுதி நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

