விடுதலைப் புலிகளின் பொருட்களைத்தேடி மூன்றாவது நாளாகத் தொடரும் அகழ்வுப்பணி!(படங்கள்)

Sri Lanka Army Tamils Mullaitivu Sri Lanka Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Sep 27, 2023 03:55 PM GMT
Report

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி மூன்றாவது நாளாக அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், காவல்துறை விசேட அதிரடிப்படையினர், தடயவியல் காவல்துறையினர் , இராணுவத்தினர், குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் இந்த மூன்றாவதுநாள் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப்புலிகள் காலத்தில் தங்கம், ஆயுதம் உள்ளிட்ட பொருட்கள் புதைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடந்த (25)ஆம் திகதி  குறித்த இடத்தில் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

விடுதலைப் புலிகளின் பொருட்களைத்தேடி மூன்றாவது நாளாகத் தொடரும் அகழ்வுப்பணி!(படங்கள்) | Excavation Continues For The Third Day In Tigers

விடுதலைப் புலிகளின் தங்கம் தேடும் பணி: ஒலிநாடா ஒன்று மீட்பு (படங்கள்)

விடுதலைப் புலிகளின் தங்கம் தேடும் பணி: ஒலிநாடா ஒன்று மீட்பு (படங்கள்)

அகழ்வுப்பணிகள் இடை நிறுத்தம்

நேற்றும்(26) அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் அகழப்பட்ட குழியிலிருந்து நீர் ஊற்றெடுத்த காரணத்தினால், அகழ்வுப்பணிகள் இடை நிறுத்தப்பட்டு, நீர் இறைக்கும் மின் மோட்டார் இரண்டைப் பயன்படுத்தி குழியிலுள்ள நீரை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

மேலும்,இரண்டு சிறிய கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.

விடுதலைப் புலிகளின் பொருட்களைத்தேடி மூன்றாவது நாளாகத் தொடரும் அகழ்வுப்பணி!(படங்கள்) | Excavation Continues For The Third Day In Tigers

இவ்வாறான சூழலில் குறித்த அகழ்வுச் செயற்பாடுகள் முன்றாவது நாளாக  இன்று  (27) முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக காலையில் நீர் இறைக்கும் மின் மோட்டர்களைப் பயன்படுத்தி குழியில் ஊற்றெடுத்திருந்த நீர் அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆளுநர் செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கை! சாதகமாக பதிலளித்த பிரதமர்

ஆளுநர் செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கை! சாதகமாக பதிலளித்த பிரதமர்

2ஆம் நாள் அகழ்வு

அத்தோடு குறித்த அகழ்வுப் பணிக்கு பெரிய கனரக இயந்திரம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இன்று நண்பகல் (பெக்கோ) இயந்திரத்தை குறித்த இடத்திற்கு வரவழைத்து முன்றாவது நாள் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அத்தோடு (26)நேற்றைய இரண்டாம்நாள் அகழ்வின்போது, அகழ்விடத்திற்கு அருகேயிருந்த ஆலமரம் ஒன்று குழியினுள் வீழ்ந்த நிலையில் அந்த ஆலமரத்தை அப்புறப்படுத்தி அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் இதுவரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எவ்வித ஆயுதங்களோ, தங்கங்களோ மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பிரசவத்திற்காக மருத்துவமனை சென்ற பெண்ணின் கருப்பை அகற்றிய மருத்துவர்கள்!

பிரசவத்திற்காக மருத்துவமனை சென்ற பெண்ணின் கருப்பை அகற்றிய மருத்துவர்கள்!


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021