சர்வதேச சமூகம் தமிழ் மக்களை கைவிட்டுள்ளதா : சந்தேகம் வெளியிட்ட சிறீதரன்
தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட இன அழிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் சர்வதேச சமூகம் தமிழ் மக்களை கைவிட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
எனவே சர்வதேச சமூகம் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என கிளிநொச்சியில் நேற்று(11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “முன்பு அகழப்பட்ட முறைக்கும் தற்போது அகழப்படுகின்ற முறைக்கும் வித்தியாசம் இருப்பதனை பார்க்க முடிந்தது.
பல்கலைக்கழக மாணவர்களும் தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தினை சேர்ந்தவர்களுடைய வழிகாட்டல் ஆலோசனைகளோடு நுணுக்கமாக தொல்பொருள் ஆய்வாளர் அகழ்ந்தெடுப்பதனை பார்க்க கூடியதாக இருந்தது.
இதன்போது எடுக்கப்பட்ட தடயப்பொருட்களை வைத்து பார்க்கின்ற போது நூற்றுக்கு நூறு வீதம் பெண் போராளிகளுடையது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.
இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட போராளிகளுடையதாக இருக்கும் என்பதற்கான ஆதாரமாக இதனை பார்க்கின்றோம்.
கடந்த 6 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் இவ் விடயம் தொடர்பில் அண்மைக்காலமாக இவ்வாறு தமிழ் பகுதிகளில் தமிழ் இளைஞர், யுவதிகள் எலும்புக்கூடுகளாக எடுக்கப்பட்டிருக்கின்ற விடயம் தொடர்பில் எந்தவித விடயங்களும் முன்வைக்கப்படவில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் மேலும் பல தடையப் பொருட்கள்: கருத்து தெரிவிக்க அதிகாரிகள் மறுப்பு(படங்கள்)
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.