எகிறும் டொலரின் பெறுமதி - அரச வங்கிகள் தொடர்பில் வெளியான எச்சரிக்கை
இலங்கை ரூபாவின் பெறுமதி வரும் காலங்களில் வீழ்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்கிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி கோ. அமிர்தலிங்கம்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 600 மில்லியன் டொலர்களை இலங்கை பெற்றதன் பிற்பாடே இதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என அவர் கூறுகிறார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் இணைந்துகொண்டு தற்கால பொருளாதார நகர்வுகள் தொடர்பில் கருத்து பகிர்கையில் இவ்வாறு கூறியிருந்தார்.
ரூபா மீதான அழுத்தங்கள்
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை நிதியைப் பெற்ற அடுத்த கணம், தாம் பெற்ற பில்லியன் டொலர் கணக்கான கடன்களை இலங்கை மீளச் செலுத்த வேண்டும்.
கடன் கொடுக்கத் தொடங்கும் போது தற்போது கையிருப்பில் இருக்கும் டொலர்களை விடுவிக்க வேண்டிவரும். ஆகவே இலங்கை ரூபா மீதான அழுத்தங்கள் கூடும்.
இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படவில்லை. அது தளர்த்தப்பட்டால் இன்னும் டொலர்கள் வெளியே செல்லும். ஆகவே, இலங்கை ரூபாவின் பெறுமதி ஏற்றத்தாழ்வுகள் ஊகத்தின் அடிப்படையில் ஒருசில கிழமைகளுக்கு இருக்கலாம் என அவர் கூறுகிறார்.
இதன்போது, இலங்கையின் நிதித்துறையில் செயற்படும் அரச வங்கிகளின் தற்போதைய கணக்குகளை உடனடியாக வேறு வங்கிகளுக்கு மாற்றவுள்ளதாக அனைத்து அரசாங்க கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் நிதி அமைச்சருக்கு அறிவித்துள்ள விவகாரம் தொடர்பிலும் தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியின் முழுமையான காணொளி