வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் : ஏன் தெரியுமா..!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இலங்கைக்கு வரவிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டில் தற்போது நிலவும் விசா மற்றும் கடவுச்சீட்டு நெருக்கடி காரணமாக சிரமங்களை எதிர்நோக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் தேர்தலுக்காக நாட்டிற்கு திரும்ப எதிர்பார்த்துள்ளதாகவும், கடவுச்சீட்டு காலாவதியானவர்கள் கடவுச்சீட்டை புதுப்பிப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், விசா பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அரசு மீது சந்தேகப்படும் அரசியல்வாதி
அரசாங்கம் வேண்டுமென்றே பிரச்சினைகளை மோசமடைய அனுமதித்துள்ளதா என சந்தேகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தற்போது கடவுச்சீட்டு(passport) அச்சிடுவதற்கான புத்தகங்கள் தீர்ந்துவிட்டதால் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டு தொகையில் குறைவு ஏற்பட்டதை அடுத்து நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |