தமிழ் பாடசாலை ஒன்றில் வெடித்து சிதறிய மர்மப் பொருள்: 3 மாணவர்கள் காயம்
Sri Lanka Police
Kandy
Sri Lankan Peoples
Sri Lankan Schools
By Dhilak
கம்பளை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று மாணவர்கள் காயமைடைந்துள்ளனர்.
இந்த வெடி விபத்தானது, கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட மாவத்துரை கலைமஹால் தமிழ் கல்லூரியில் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூன்று மாணவர்களும் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்கான காரணம்
பாடசாலை நேரத்தில் இந்த மூன்று மாணவர்களும் பந்து போன்ற ஒன்றை பார்த்து மாணவர் ஒருவர் அதை உதைத்த போது குறித்த மர்மப்பொருள் வெடித்து சிதறி மாணவனின் காலணி உடைந்து காலில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.