சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு வெளியான அறிவித்தல்
extension
apply
o l exam
L.M. D. Dharmasena
By Sumithiran
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம். டீ.தர்மசேன (L.M. D. Dharmasena)தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 17 ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
எனவே உரிய அறிவுறுத்தல்களை நன்கு வாசித்து அதற்கமைய விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

