இலங்கைக்கு வழங்கிய இந்திய கடன் உதவித் திட்டம் நீடிப்பு..!
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவித் திட்டம் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஒப்பந்தம் இன்று (30) நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டதுடன், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒதுக்கப்பட்ட 1,000 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 576.75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பான அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் அடுத்த ஒரு வருடத்திற்குள் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
(2/2) The initial agreement was signed in 2022 March & out of the 1000 million US dollars allocated materials were imported for $ 576.75 mil. The agreement is extended for the remaining $ 423.25 mil. We will prioritize the import of essential medicines till March 2024. pic.twitter.com/rcOZMupyxZ
— Shehan Semasinghe (@ShehanSema) May 30, 2023
