ஜனாதிபதி தேர்தல் : காவல்துறைக்கு வழங்கப்பட்ட மேலதிக நாள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு இரண்டு நாட்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி 4ஆம் திகதி தபால் வாக்குகளைப் பயன்படுத்த முடியாத காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு 6ஆம் திகதியும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தபால் மூலம் வாக்களிக்க இரண்டு நாட்கள் அவகாசம்
இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சார கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்த பேரணிகளின் பாதுகாப்புக்கு காவல்துறை அதிகாரிகள் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக தபால் மூலம் வாக்களிக்க இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
அந்த நாட்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத காவல்துறை உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |