கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் (Canada) சில பகுதிகளில் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், மேற்குக் கனடா மற்றும் அன்மித்தத பகுதிகளில் இவ்வாறு கடுமையான குளிர் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறித்த தகவல்களை கனேடிய சுற்றாடல் திணைக்களம் (Environment and natural resources) வெளியிட்டுள்ளது.
கடுமையான குளிர் நீடிக்கும்
அதன்படி, மறை 30 பாகை செல்சியஸ் முதல் மறை 50 பாகை செல்சியஸ் வரையில் கடுமையான குளிர் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
கல்கரி, எட்மோன்டன், றெனினா, சஸ்காடூன், வின்னிபெக் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குளிர் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக விமானப் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா - டொரொன்டோவில் சில முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
