முகநூல் உரிமையாளர் மெட்டாவுக்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய அபராதம்..!
உலகின் பிரபலமான சமூகவலைத்தளங்களில் ஒன்றான
பேஸ்புக் எனப்படும் முகநூலின் நிறுவனமாக மெட்டாவுக்கு ஐரோப்பாவில்
அது இதுவரை சந்திக்காத அளவுக்கு 1.2 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முகநூல் நிறுவனம் தனது ஐரோப்பிய பயனாளிகளின் தரவுகளை அமெரிக்காவிற்கு அனுப்பியதை மையப்படுத்தி அயர்லாந்தை தளமாக கொண்ட தரவு பாதுகாப்பு ஆணையம் இன்று இந்த அபராததொகையை அறிவித்துள்ளது.
தனது நிறுவனத்துக்கு இவ்வாறு ஒரு பாரிய அபராதத்தொகை விதிக்கபட்டால் முகநூல் நிறுவனம் ஐரோப்பாவை விட்டு வெளியேறும் என அதன் தாய் நிறுவனமான மெட்டா அச்சுறுத்தல் விடுத்திருந்தாலும் இந்த அச்சுறுத்லை அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் இன்று காலை இந்த அபராதத்தை அறிவித்ததுடன் முகநூல் நிறுவனத்தின் விதிமீறலையும் கண்டனம் செய்துள்ளது.
1.2 பில்லியன் யூரோ
ஐரோப்பாவை பொறுத்தவரை மெட்டாவுக்கு விதிக்கப்பட்ட 1.2 பில்லியன் யூரோ என்ற இந்த அபராததொகை ஒரு சாதனை அளவாகும்.
எனினும் முகநூல் வலைத்தளத்தில் பயனாளிகளாக உள்ள ஐரோப்பியர்களின் அடிப்படை உரிமை மற்றும் அவர்களின் சுதந்திரத்துக்கு ஆபத்துக்களை உருவாக்கும் வகையில் அவர்களின் தரவுளை அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கபட்டுள்ளது.
அத்துடன் ஐந்து மாதங்களுக்குள் ஐரோப்பிய பயனர்களின் தரவுகளை அமெரிக்காவிற்கு மாற்றும் நகர்வுகளை நிறுத்த வேண்டும் எனவும் அதேபோல ஆறு மாதகாலத்துக்குள் அமெரிக்காவில் முகநூல் நிறுவனத்தின் பயன்பாட்டில் உள்ள தரவுசேகரிப்பு களஞ்சியங்களில் இருந்து ஐரோப்பிய பயனர்களின் தரவுகள் அகற்றப்படவேண்டும் எனவும் உத்தரவிடப்படுகிறது
இந்த நிலையில் அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையத்தின் இந்த அபராத நகர்வு நியாயமற்ற ஒரு நடவடிக்கையென விமர்சித்துள்ள மெட்டா நிறுவனம்; இந்த முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போததாகவும் குறிப்பிட்டுள்ளது