போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை - திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய 26 வயது இளைஞன்
Sri Lanka
Lottery
Sri Lanka Police Investigation
By pavan
நாட்டில் தற்போது போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதனால் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய, குருநாகல் நகரில் விற்பனை செய்யப்பட்டு வந்த 232 போலி லொத்தர் சீட்டுகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து குருநாகல் காவல்துறை அதிகாரிகள் நேற்று மாலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
232 போலி லொட்டரி சீட்டுகள்

இதன்போது அங்கு 232 போலி லொட்டரி சீட்டுகளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி