போலி நாணயத்தாள்களுடன் பெண்ணொருவர் கைது
arrest
police
fake
money
By Vanan
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் போலி நாணயத் தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
இன்று(05) சுதந்திரபுரம் கொலனி பகுதியில் 500 ரூபா போலி நாணயத்தாள்கள் 17 வைத்திருந்த குற்றச்சாட்டில் 41 அகவையுடைய பெண் ஒருவரை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள்.
சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி