புதுக்குடியிருப்பில் 35 இலட்சம் கள்ள நோட்டு - அச்சிடும் இயந்திரத்துடன் ஒருவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ள நோட்டு அடித்த குற்றச்சாட்டில் ஒருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(9) இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் கள்ளநோட்டு அச்சிடப்படுவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
42 அகவையுடைய குறித்த நபர் திருகோணமலையில் திருமணம் செய்து தேவிபுரம் பகுதிக்கு வந்து செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபரிடம் கள்ளநோட்டு அச்சிடும் இயந்திரம் ஒன்றும் அச்சிடப்பட்ட 5000 ரூபா தாள்கள் 700 ம் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட நபரையும் சான்று பொருட்களையும் சிறப்பு அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.