போலி கடவுச்சீட்டு விவகாரம்: இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்!
போலி கடவுச் சீட்டுக்களின் மூலம் இலங்கை வர முயன்ற தம்பதியினர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவினரால் சந்தேக நபர்கள் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போலியான கடவுச் சீட்டுக்கள்
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, நேற்றிரவு கொழும்பு செல்லும் விமானத்தில் ஏறவிருந்த பயணிகளின் பயண ஆவணங்களை குடிவரவு அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
பெரம்பலூரை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஹனிஷா ஆகியோரின் கடவுச்சீட்டுக்களை சோதனை செய்த போது, அவை போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக பெரம்பலூரில் தங்கி, நிவாரண அட்டைகள் மற்றும் பிற இந்திய அடையாள அட்டைகளை சந்தேக நபர்கள் கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணை
சமீபத்தில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் இலங்கை செல்ல முடிவு செய்து பெரம்பலூர் முகவரியில் போலி கடவுச் சீட்டுக்களை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டு குடியேற்றத்துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மற்றும் கியூ பிரிவு அதிகாரிகள்,
சென்னை விமான நிலையத்தில் விசாரணைகளை மே்றகொண்டதன் பின்னர், சென்னை மத்திய
குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |