பொய்த்துப் போன ராஜபக்சர்களின் வாக்குறுதிகள் - கொள்கையும் இல்லை என்கிறார் ரிசாட்
rajapaksa
false
Rishad Bathiudeen
promises
By Vanan
கோட்டாபய மஹிந்த அரசாங்கம் கொள்கையின்றி தொடர்ந்தும் பயணித்தால் நாடு அதள பாதாளத்திற்குள் செல்லும் நிலை ஏற்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதின் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 22 பொது அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்விலேயே அவர் இதனை கூறினார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“நாட்டில் உணவுக்கே மக்கள் கஸ்டப்படும் நிலையில் பொருட்களின் விலை திடீரென அதிகரித்துள்ளது.
இந்த அரசாங்கம் ஒரு கொள்கையுடன் பயணிப்பதாக எமக்குத் தெரியவில்லை.
தேர்தலுக்கு முன்னர் ஒன்றைச் சொன்னார்கள். ஆனால் அதன் பின் ஒவ்வொன்றும் மாறியே நடக்கிறது” என அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி