வாழ்வாதாரத்தை இழந்து வடு சுமந்து வாழும் குடும்பம் (காணொளி)
ஒரே நாளில் ஒட்டுமொத்த தலையெழுத்தும் மாறிப்போனவர்களாய், வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த குடும்பத்தினர்.
குடும்பத்தலைவனான ரோஹன் சுமார் எட்டு மாதங்கள் முன்னதாக நரம்பு சம்மந்தமான நோயினால் பாதிப்புற்று தொழிலுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
அன்று முதல் 04 அங்கத்தவர்களைக் கொண்ட இந்தக் குடும்பம் அவர்களது வாழ்வாதாரத்திற்கே கஷ்ட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறது
ஆகக்குறைந்த உதவியாக உணவுக்காவது உதவி அளிக்கும் படி உருக்கமாக கூறியுள்ளனர்.
வாழ்ந்து வரும் ஊரில் வாராது வந்த புயல் வாழ்வை சூறையாடிச் செல்வது போல், வாழ்வுக்காய் தவித்து நிற்கும் இவர்களின் வலிகளை சுமந்து வருகிறது என் இனமே என் சனமே நிகழ்ச்சி.
இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்புபவர்கள் கீழுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
WhatsApp / Viber - +94767776363 / +94212030600