மட்டக்களப்பில் இன்று இரவு குடும்பஸ்தருக்கு நேர்ந்த அனர்த்தம்
family man
elephant
baticaloa
By Sumithiran
மட்டக்களப்பில் யானை தாக்கியதில் 6 பிள்ளைகளின் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பெரிய புல்லுமலையை சேர்ந்த 58 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையான சி. ராமநாதன் என்பவரே யானை தாக்குதலுக்கு இலக்காகி மகோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது வயலுக்கு காவல் காக்க சென்ற போது இன்று இரவு 9.25 மணியளவில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
யானை தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயமடைந்த நிலையில் நோய்காவு வண்டியில் மகோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை - மனித பிரச்சனை காரணமாக பல மனிதர்களும் சில யானைகளும் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி