மட்டக்களப்பில் கிணற்றில் தவறி வீழ்ந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பில் (Batticaloa) தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (05) இடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி காவல் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தும்பங்கேணி கிராமத்தை சேர்ந்த 50 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான தங்கராசா பரமானந்தம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
நேற்று முன்தினம் (04) நீர்நிலையில் வீழ்ந்து உயிரிழந்த குழந்தை ஒன்றின் மரண வீட்டுக்கு சென்றுவிட்டு வந்து கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த போதே கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர் பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |