மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் மாயம்
கந்தளாய் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் குளத்தில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் இன்னும் வீடு திரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச் சம்பவத்தில் வெவசிரி கம என்ற இடத்தைச் சேர்ந்த 40 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் கடந்த( 28 )ஆம் திகதி மாலை மூன்று மணியளவில் கந்தளாய் குளத்திற்கு தனியாக மீன் பிடிக்க சென்றதாகவும், மறுநாள் காலையில் அவர் வீடு திரும்பவில்லை எனவும் உறவினர்களால் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
இந்த முறைப்பாட்டை அடுத்து காவல்துறையினரும், பொது மக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேவேளை, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் கபிலனுவான் அத்துக்கோரல்ல சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்தார்.
தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கை ஈடுபட்ட போதும், இன்று(30) வரை காணாமல் போனவரை கண்டுபிடிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |