யாழ்ப்பாணத்தில் நன்றியுள்ள ஜீவன்களுக்கு அடைக்கலம் அளிக்கும் குடும்பம்
யாழ்ப்பாணம்(jaffna) சங்கானை பகுதியில் வசித்துவரும் குடும்பம் தெருவோரத்தில் அநாதரவாக நிற்கின்ற நாய்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று அவற்றினை வளர்த்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் இரண்டு நாய்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியானது தற்போது 39 நாய்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.அவர்கள் நாய்களை தங்களது சொந்த பிள்ளைகள் போலவே வளர்த்து வருகின்றனர்.
நாய் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்கு
அயல் வீட்டில் உள்ள ஒருவர் அவர்கள் வளர்க்கின்ற நாய் ஒன்றின் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்துள்ளனர்.
நாய்களின் பாதுகாப்புக்கான சட்டம்
அத்துடன் அவர்களது நாய்கள் காணாமல் போகின்ற சந்தர்ப்பங்களில் ஜோசியம் பார்த்தல், சமூக ஊடகங்கள் மூலம் பதிவுகளை பகிர்தல் மூலம் நாய்களை கண்டுபிடிக்கின்றனர்.
குறித்த குடும்பத் தலைவர் எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் நடைபயணம் ஒன்றினை மேற்கொண்டு, பலரது கையொப்பங்களை பெற்று நாய்களின் பாதுகாப்புக்கான சட்டங்களை இயற்றுவதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்