அமைச்சு பதவி வழங்கப்பட்டால் ஏற்றுக்கொள்ள தயார்! பிரபல வர்த்தகர் பகிரங்கம்
Dollar to Sri Lankan Rupee
Parliament of Sri Lanka
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Kiruththikan
அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
100 திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை
ஒரு அமைச்சரை நியமித்து அவரிடம் 100 திட்டங்களை நடைமுறைப்படுத்தி மூன்று அல்லது ஆறு மாதங்களில் டொலர்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பினை ஒப்படைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரசாங்க வருமானத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான 12 யோசனைகளையும் அவர் முன்மொழிந்துள்ளார்.
ஊழல் மோசடிகள் இடம்பெறுவதற்கு முன்னதாக அவற்றை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
