பெருந்தொகை பணத்துடன் வீதியில் கிடந்த பை! தேடிச் சென்று ஒப்படைத்த நல்லுள்ளம்
திருகோணமலையில் (Trincomalee) வீதியில் கிடந்த பணப்பையை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.அர்ஹம் என்பவரின் பணப்பை கிண்ணியாவுக்குச் சென்று மூதூர் ஊடாக தோப்பூர் வரும்போது சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தது.
குறித்த பணப்பையில் 27,000 ரூபா பணம், சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை, ATM அட்டை உள்ளிட்டவைகள் காணப்பட்டிருந்தன.
உரியவரிடம் ஒப்படைப்பு
இந்த நிலையில் மூதூரைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்து சாலை முகாமையாளரான எம்.நௌபீல் என்பவர் மூதூரில் கண்டெடுத்த பணப்பையையும் ஆவணங்களையும் உரியவரின் ஊரான தோப்பூரில் வைத்து நேற்று (26) இரவு ஒப்படைத்தார்.
பணப்பை கிடைத்த மகிழ்ச்சியில் பணப்பையை கண்டெடுத்த நபருக்கு அன்பளிப்பு வழங்கிய போதும் அவர் அதனை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதுடன் இருவரும் நன்றிகளை பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
