இலங்கையில் பாதாள உலக குழுவை வழிநடத்தியவர் டுபாயில் சிக்கினார்
Sri Lanka Police
Sri Lanka
Dubai
By Sumithiran
பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர்
பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நதுன் சின்தக்க எனப்படும் ஹரக் கட்டா என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மகதுரே மதுஷுக்குப் பின்னர் டுபாயில் இருந்து இலங்கையின் பாதாள உலக குழுவை வழி நடத்தியவர் இவரே என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் அண்மையில் நடந்த கொலைகள்
இலங்கையில் கடந்த 2 மாதங்களில் நடந்த பல கொலைகளை, வாடகைக் கொலையாளிகளை பயன்படுத்தி இவரே நடத்தியதாக தெரிய வந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் சர்வதேச காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தனது மனைவியுடன் மலேசியாவிற்கு பயணித்த போதே கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி