யானை தாக்கியதில் விவசாயி பலி
Trincomalee
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா வான் எல காவல்துறை பிரிவிட்குட்பட்ட செம்பி மோட்டை வயல் நிலப் பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த யானை தாக்குதல் சம்பவமானது, நேற்று (21) மாலை இடம் பெற்றுள்ளது.
தற்போது நெற் செய்கை அறுவடை காலம் நெருங்கிய நிலையில் தனது விவசாய நிலத்தை பாதுகாப்பதற்காக சென்றவரே யானை தாக்குதளுக்கு இலக்கியாகியுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவ இடத்துக்கு திடீர் மரண விசாரனை அதிகாரி எம்.எஸ்.ஷாபி சென்று உயிரிழந்தவரின் சடலத்தை பார்வையிட்டுள்ளார்.
வட்டமடு,ஆயிலியடி எனும் முகவரியை சேர்ந்த அப்துல் சரீப் முஹம்மது ஏகூப் வயது (67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வான் எல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 15 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்