03 மாதத்தில் 15 லட்சம் ரூபா இலாபம்! வறண்ட பூமியில் சாதனை படைத்த இலங்கை விவசாயி
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளம் விவசாயி ஒருவர் முட்டைக்கோவாவை பயிரிட்டு பெருமளவு இலாபத்தை பெற்றுள்ளார்.
நுவரெலியாவில் வளரும் முட்டைக்கோவாவை அனுராதபுரம் மாவட்டத்தின் மஹஇலுக்பள்ளம் பகுதியில் பயிரிட்டு வெற்றிகரமான அருவடையை பெற்றுள்ளார்.
அனுராதபுரம் மஹஇலுக்பள்ளம் மஹாமிகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் டி.எம்.சஞ்சீவ கெலும் திஸாநாயக்க என்ற 29 வயதுடைய இளைஞரே இதனை மேற்கொண்டுள்ளார்.
முழு இளைஞர் சந்ததியினருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் சஞ்சீவ, கோவா மூலம் மூன்று மாதங்களில் 15 இலட்சம் ரூபாவை பெற திட்டமிட்டுள்ளார்.
நுவரெலியாவில் வளரும் கோவா
எள்ளு, சோளம், கடலை போன்றவை பயிரிடப்படும் வயல்வெளியில் நுவரெலியாவில் வளரும் முட்டைக்கோவா விதைகளை விதைத்துள்ளார்.
அனுராதபுரத்தில் மிகவும் வறண்ட காலநிலை நிலவுகின்ற போதும் இந்த இளைஞனின் முட்டைக்கோவாவை தோட்டம் நுவரெலியா தோட்டம் போன்று காட்சியளிக்கின்றமை விசேட அம்சமாகும்.
சிறு வயது முதல் விவசாயத்தின் மீது விரும்பம் கொண்டுள்ள அவர், வித்தியாசமான முறையில் பயிர்களை பயிட முயற்சித்துள்ளார்.
ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, புதிய கலப்பின முட்டைக்கோவா விதை வகையை தேர்வு செய்து பயிரிட்டுள்ளார்.
அவர்களின் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் தான் முதன்முறையாக வெளிப் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற முட்டைக்கோவாவை வெற்றிகரமாக பயிரிட்டதாக அவர் கூறினார்.
இந்தப் பயிர்ச்செய்கையை இந்த இளைஞன் மிகவும் வெற்றிகரமாகச் செய்துள்ளதோடு, மூன்று மாத கடின உழைப்பின் பலனாக பதினைந்து லட்சம் ரூபா இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |