எமனாக மாறிய பனி மூட்டம்! பாகிஸ்தானில் 14 பேரை காவு வாங்கிய கோர விபத்து
பாகிஸ்தானில் நிலவும் மோசமான பனி மூட்டம் காரணமாக ஏற்பட்ட வாகன விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாரதிக்கு பனி மூட்டத்தால் வீதி தெரியாமல் போனதன் காரணமாக, பாலத்தில் இருந்து பாரவூர்தி கவிழ்ந்த விபத்திலேயே இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து சுமார் 200 கி.மீ. தூரத்தில் உள்ள சர்கோதா மாவட்டத்திலேயே விபத்து சம்பவித்துள்ளது.
கடும் பனி
இந்த மாவட்டத்தில் உள்ள கோட் மொமின் என்ற பகுதியில் சென்றுக்கொண்டிருந்த பாரவூர்தியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடும் பனி மூட்டம் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வாகனத்தில் 23 பேர் இருந்ததாகவும், இவர்கள் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும், உயிரிழந்தவர்களில் 8 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |