பந்தயம் கட்டி பறந்த மோட்டார் சைக்கிள்கள் : பின்னர் நடந்த விபரீதம்
பந்தயம் கட்டி இரண்டு மோட்டார்சைக்கிள்களில் இளைஞர்கள் வேகமாக சென்ற நிலையில் ஒரு மோட்டார் சைக்கிள் எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இரத்தினபுரி-பாணந்துறை (A008) பிரதான சாலையில் இலிம்பா சந்திக்கு அருகில் ஜனவரி 16 ஆம் jிகதி இரவு 11.00 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 22 வயதுடைய மற்றொரு இளைஞர் தற்போது ஹொரண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பந்தய முறையில் அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள்கள்
இது தொடர்பில் காவல்துறை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பந்தய முறையில் அதிவேகமாக சென்றதாகக் கூறப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் எதிர் திசையில் இருந்து இலிம்பா நோக்கி திரும்பிய காருடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் முதலில் அம்புலன்ஸ் மூலம் ஹொரண மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 17 வயதுடைய நபர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் உயிரிழந்தார்.
ஓட்டுநர் உரிமம் இல்லை
அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய காரை ஓட்டிய ஓட்டுநர் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, ரூ. 500,000 தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இறந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதை காவல்துறையினர் மேலும் வெளிப்படுத்தினர். மோட்டார் சைக்கிளை இயக்க அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஹொரணை காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |