மேலதிக வகுப்பு முடிந்து வீடு திரும்பிய தந்தையும் மகளும் விபத்தில் உயிரிழப்பு..!
Sri Lankan Peoples
Accident
By Kiruththikan
விபத்து
மீரிகம – பஸ்யால வீதியின் கொட்டகந்த பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று(14) மாலை மீரிகமவிலிருந்து பஸ்யால நோக்கி பயணித்த காரொன்று மோதியதில் இவர்களிருவரும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
54 வயதான தந்தையும் 14 வயதான மகளுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
தப்பிச்சென்ற சாரதி கைது
மேலதிக வகுப்பு நிறைவடைந்ததன் பின்னர் மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.
விபத்தின் பின்னர் தப்பிச்சென்ற காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி