தந்தையால் தாக்கப்பட்டு மகன் உயிரிழப்பு!
தந்தையால் தாக்கப்பட்ட மகன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் அனுராதபுரம் காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசமொன்றில் இடம்பெற்றுள்ளது.
25 வயதான இளைஞர் ஒருவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம்
கொலை செய்யப்பட்ட இளைஞர் இரவு மது அருந்தி விட்டு வந்து அவரது தாயைத் தாக்கியுள்ளார், இதனால் கோபமடைந்த தந்தை அவரைத் தாக்கியதால் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட இளைஞர் தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது தாய், தந்தை மற்றும் சகோதரர்களை தாக்குவதாகவும் காவல்துறை விசாரணைகளில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர்
உயிரிழந்த குறித்த இளைஞர் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்களுடன் வசித்து வருவதாகவும், 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வாகன விபத்து ஒன்றில் அவரது வலது காலை இழந்தவர் எனவும் கூறப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
