கோர விபத்தில் தாய், தந்தை மற்றும் மூன்று வயது மகள் பலி
srilanka
accident
police
death
investigation
By Sumithiran
தனமல்வில பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வயது மகள் உட்பட தாய்,தந்தை என மூவர் உயிரிழந்துள்ளனர்.
கெப் வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது முச்சக்கரவண்டியில் பதுளையில் வசிக்கும் தம்பதியரும் அவர்களது மூன்று வயது மகளும் பயணித்துள்ளனர்.
கெப் வண்டியின் சாரதி தனமல்வில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி