இந்தியாவில் காணாமல் போன 2 வயது குழந்தை: தந்தை வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்
Uttar Pradesh
India
World
By Laksi
இந்தியாவில் (India) தந்தை ஒருவர் தமது இரண்டு வயது குழந்தையை ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவமானது உத்தர பிரதேச மாநில மீரட் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இரண்டு வயது குழந்தை காணாமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவாகியிருந்தது.
வாக்குமூலம்
இதனையடுத்து, தந்தையின் மீது சந்தேகப்பட்ட காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, தாம் குழந்தையை ஆற்றில் வீசியதாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மேலும், குறித்த இரண்டு வயது குழந்தையும் அந்த குழந்தையின் சகோதரனும் சண்டையிட்டதால், ஆத்திரமடைந்து குழந்தையை ஆற்றில் வீசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அவருடைய இன்னும் இரண்டு குழந்தைகளும் சில காலங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி