மகன் தாக்கியதில் தந்தை பலி - தாய் படுகாயம் - தமிழர் பகுதியில் சம்பவம்..!
Sri Lanka
Sri Lankan Peoples
Death
By Kiruththikan
கிளிநொச்சி தருமபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மயில் வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நள்ளிரவு 1.00 மணியளவில் தந்தை தாய் மகனுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மகனால் தாக்கப்பட்ட தந்தை படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடைநடுவே உயிரிழந்துள்ளார்.
தாயார் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் இறந்த தந்தையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பிச்சைமுத்து இராமசாமி எனும் 64 வயதுடையவர் ஆவர்.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி