மனைவியுடன் தகராறு - மகனுக்கு விஷம் கொடுத்த தந்தை
பொலன்னறுவையில் மனைவி வெளிநாடு செல்வதனை தடுப்பதற்காக 12 வயது மகனுக்கு விஷம் கொடுத்த தந்தை ஒருவரை நேற்று காவத்துறையினர் கைது செய்துள்ளனர்.
பொலன்னறுவையில் உள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த 48 வயதுடைய தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது 12 வயது மகனுக்கு விஷம் கொடுத்ததையடுத்து, மகன் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மனைவியுடன் தகராறு
தந்தைக்கும், தாய்க்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
நேற்று மாலை மகன் தனது தந்தையின் வீட்டிற்குச் சென்றபோது, மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக மகனுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மகனுக்கு தந்தை விஷம் கொடுத்த செய்தி அறிந்த தாய் தந்தை வாழ்ந்த வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், விஷம் அருந்திய மகனை வைத்தியசாலையில் சேர்த்தார்.
தந்தை கைது
இதனை தொடர்ந்து தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மகனிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் போது, தாய் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் தந்தை விஷம் குடிக்குமாறு மகனுக்கு அழுத்தம் கொடுத்ததாக அவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.