நாகை - காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை ரத்து..!
இலங்கை இந்திய கப்பல் சேவையானது நேற்று(14) ஆரம்பித்திருந்த நிலையில் இன்று (15) கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து வருகை தந்த முதலாவது கப்பல் 50 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் காங்கேசன்துறையை மதியம் 12.20 மணியளவில் வந்தடைந்தது.
காரணம்
இந்நிலையில், இன்று போதிய அளவு டிக்கெட் முன்பதிவு இல்லாத காரணத்தினால் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் தற்பொழுது கப்பல் இயக்கப்பட உள்ளதாகவும் KPV Shaik Mohammed Rowther என்ற தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் நாளை காலை மீண்டும் கப்பல் போக்குவரத்து மீள தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
40 வருடங்களின் பின்னர் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இந்த கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்ககது.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்