நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த முதலாவது கப்பல் (காணொளி)

Jaffna Nimal Siripala De Silva Sri Lanka India
By Sathangani Oct 14, 2023 09:09 AM GMT
Report

இரண்டாம் இணைப்பு

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை உத்தியோகபூர்வமாக இன்று (14) ஆரம்பமானது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து வருகை தந்த கப்பல் 50 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் காங்கேசன்துறையை மதியம் 12.20 மணியளவில் வந்தடைந்தது.

செரியாபாணி கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சீனாவுக்கு குரங்குகளை அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது ஏன்!(படங்கள்)

சீனாவுக்கு குரங்குகளை அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது ஏன்!(படங்கள்)


40 வருடங்களின் பின்னர் 

மதியம் 1.15 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் பச்சை கொடி அசைத்து மீண்டும் இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகம் நோக்கி 31 பயணிகளுடன் கப்பல் புறப்பட்டது.

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த முதலாவது கப்பல் (காணொளி) | 1St Ferry Service Arrived At Kks From Nagapattinam

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழிக் கட்டணமாக 27,000 ரூபாவும் இருவழிக்கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளதுடன், 50 கிலோகிராம் வரை இலவசமாக பொருட்களை எடுத்துச்செல்லலாம்.

இறுதியாக 1984 ஆம் ஆண்டு தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் கப்பல் சேவை இடம்பெற்றிருந்தது.

40 வருடங்களின் பின்னர் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இந்த கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் தொடர்பில் அதிபரின் முக்கிய அறிவித்தல்

எரிபொருள் தொடர்பில் அதிபரின் முக்கிய அறிவித்தல்


முதலாம் இணைப்பு 

நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் இன்று(14)  12.20 மணியளவில் காங்கேசன்துறை  துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த பயணிகள் கப்பலினை கப்பல் துறை விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறீ பால டி சில்வா மற்றும் யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

காலை 7 மணிக்கு ஆரம்பித்த பயணம் 

இந்தியாவின் நாகை துறைமுகத்திலிருந்து இன்று (14) காலை 7மணியளவில் பயணத்தை ஆரம்பித்து சற்று முன்னர் காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த முதலாவது கப்பல் (காணொளி) | 1St Ferry Service Arrived At Kks From Nagapattinam

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்த நரேந்திர மோடி

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்த நரேந்திர மோடி


இந்தக் கப்பல் சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.



GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026