விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கிகளுக்கு வரப்போகும் பணம்
By Thulsi
2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கும், வயல்களில் வேறு போகப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்கின்ற விவசாயிகளுக்கும் நிதி மானியத்தை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரால் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், 2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கு ஹெக்டெயர் ஒன்றுக்கு 25,000 ரூபா வீதம் உயர்ந்தபட்சம் 02 ஹெக்டேயருக்கு வழங்கப்படும்.
மேலும், வயல் காணிகளில் மேற்கொள்ளப்படும் வேறு போகப் பயிர்களுக்கு ஹெக்டெயர் ஒன்றுக்கு 15,000 ரூபா வீதம் உயர்ந்தபட்சம் 02 ஹெக்டெயருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்